இந்திய சுங்கத்துறையின் 'பஞ்ச பாண்டவர்கள்': போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கும் 5 லேப்ரடார் உடன்பிறப்புகள்

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த இந்த ஐந்து நாய்களும் நாட்டின் பல்வேறு முக்கிய சுங்க மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
 Five Labrador siblings
Published on: 
Summary

இந்திய விமான நிலையங்களில் நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதில், ஒரே தாய்க்குப் பிறந்த ஐந்து லேப்ரடார் ரக மோப்ப நாய்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

பஞ்சாபின் அட்டாரி எல்லைக்கு அருகே டிசம்பர் 2020-இல் 'கோகோ' என்ற சுங்கத்துறை மோப்ப நாய்க்குப் பிறந்தவை இந்த ஐந்து குட்டிகள். தாயைப் போலவே போதைப்பொருள்களைக் கண்டறிவதில் சிறந்து விளங்கும் இவை, ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள சசாஸ்திர சீமா பல் மையத்தில் கொண்டு வரப்பட்டு, அட்டாரி-வாகா எல்லையில் உள்ள சுங்கத்துறை K9 பயிற்சி மையத்தில் 8 மாத தீவிர சிறப்புப் பயிற்சி பெற்றன.

இந்திய சுங்கத்துறையின் 'பஞ்ச பாண்டவர்கள்'

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த இந்த ஐந்து நாய்களும் நாட்டின் பல்வேறு முக்கிய சுங்க மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளன. ஓவி மற்றும் ஆர்லி என்ற இரண்டும் பெண் நாய்கள்; ஓரா, ஓப்பல் மற்றும் ஓரியோ ஆகியவை ஆண் நாய்கள் ஆகும். ஓவி புனே சுங்கத்துறையிலும், மற்றவை திருச்சி, சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

'ஓவி'யின் அதிரடி வேட்டை

பயிற்சிக் காலத்தில் ஒட்டுமொத்தப் பிரிவிலும் முதலிடம் பிடித்த 'ஓவி' என்ற மோப்ப நாய், சமீபத்தில் புனே விமான நிலையத்தில் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவரின் பெட்டியை மோப்பமிட்டுக் காட்டி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்தப் பெட்டியின் ரகசிய அறையில் வாசனை வெளியே வராதவாறு வெற்றிட சீல் செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான 3.028 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெவ்வேறு நகரங்களில் பணியாற்றி வந்தாலும், புத்துணர்வுப் பயிற்சிகளின் போது மீண்டும் சந்தித்துக் கொள்ளும் இந்த ஐந்து சகோதர நாய்களும், நாட்டின் பாதுகாப்பில் தங்களது தாயின் பாரம்பரியத்தை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com