VIDEO: அட்டாரி - வாகா எல்லையில் கோலாகலமாக நடந்த கொடியிறக்க நிகழ்ச்சி

மாணவர்களின் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்கள் கவனத்தை ஈர்த்தன
கொடியிறக்க நிகழ்ச்சி
கொடியிறக்க நிகழ்ச்சி
Published on

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் இன்று மாலை கொடியிறக்க நிகழ்வு இனிதே நடைபெற்று முடிந்துள்ளது.

கலை நிகழ்ச்சிகள்

கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

பஞ்சாபி பாரம்பரிய நடனமாடி ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் அசத்தினர்

மாணவர்களின் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்கள், தற்காப்புக் கலைக் அரங்கேற்றம் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

பிஎஸ்எப்

சிறப்பு விருந்தினராக எல்லை பாதுகாப்பு படையான பிஎஸ்எப் டி.ஐ.ஜி எஸ்.எஸ். சண்டேல் கலந்துகொண்டார்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் வழக்கமான கம்பீரமான அணிவகுப்பு விழாவுக்கு அணி சேர்த்தது.

வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் செல்ல இவ்வாண்டு சுதந்திர தின நிறைவை உணர்த்தும் விதமாக தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவின் போது, அட்டாரி சோதனைச் சாவடியில் புதிதாக அமைக்கப்பட்ட டிஜிட்டல் வீடியோ திரைச் சுவர் திறக்கப்பட்டது.

இதேபோல் நாட்டின் பிற எல்லைகளிலும் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com