ஐரோப்பாவின் உயரமான சிகரத்தில் 100மீ இந்திய தேசியக்கொடியை ஏற்றிய ஆந்திர சப்-இன்ஸ்பெக்டர்

ரஷியாவில் உள்ள 5642 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் எல்ப்ரஸ் ஐரோப்பாவின் உயரமான சிகரமாகும்.
இந்திய தேசியக் கொடி
இந்திய தேசியக் கொடி
Published on: 

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் மீது வைத்துள்ள தேச பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் எலூரு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் வி. வெங்கடேஸ்வர ராவ் ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரத்தில் 100மீ தேசியக் கொடியை இன்று காலை ஏற்றியுள்ளார்.

ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரம் ரஷியாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் ஆகும். இதன் உயரம் 5642 மீட்டர் ஆகும். இந்த சிகரத்தில் வெங்கடேஷ்வர ராவ் பல நாட்களாக ஏறி இன்று காலை உச்சியை அடைத்து தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார்.

அப்போது தேசிய கீதம் பாடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார். தனது சாதனையை, பணியின்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com