இடஒதுக்கீடு இல்லை என்றால், பாஜக-வுக்கு தோல்வி: கூட்டணி கட்சி மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எச்சரிக்கை

நிஷாத் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உ.பி. அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் நிஷாத்
சஞ்சய் நிஷாத்
Published on

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு உ.பி.யில் நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் இரண்டு முறை பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்புடன் உள்ளது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள நிஷாத் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிஷாத் அமைச்சர், பாஜக இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தோல்வியை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

நிஷாத் சமூகம்

சஞ்சய் நிஷாத், நிஷாத் சமூகத்தை சேர்ந்தவர்கள். நிஷாத் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேச மாநில அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கும் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத் கூறியதாவது:-

யானை (பி.எஸ்.பி.), சைக்கிள் (சமாஜ்வாதி) மற்றும் கை (காங்கிரஸ்) நிஷாத் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை நிராகரித்தது. இதனால் அவர்கள் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். பாஜக-வும் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், அவர்களும் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். எங்களுடைய மூதாதையர்கள் நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டியதுடன், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்தனர்.

நாங்கள் இடஒதுக்கீட்டை விரும்புகிறோம். பாஜக அரசு இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். முன்னதாகவே, இந்த விவகாரத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் உங்களுடைய வழக்கறிஞர். பாஜக நீதிபதி. எனினும், எங்களுக்கு இடஒதுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சொந்த பூத்களை தயார் செய்யவும், கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com