ஐதராபாத்தில் வீடு புகுந்து குழந்தையை கடத்தி சென்ற பெண்- 12 மணி நேரத்தில் மீட்பு

தனிப்படை போலீசார் குழந்தை காணாமல் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்தனர்.
தாயிடம் குழந்தையை ஒப்படைத்த காட்சி
தாயிடம் குழந்தையை ஒப்படைத்த காட்சி
Published on: 
Summary

குழந்தை கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவரது தாயிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், அமின்பூரை சேர்ந்தவர் சரிதா (வயது 25). இவரது மகள் அக்ஷிதா (2½). சரிதா நேற்று முன்தினம் பகலில் வீட்டில் விட்டுவிட்டு அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலைக்கு சென்று இருந்தார்.

அந்த நேரத்தில் பெண் ஒருவர் வீடு புகுந்து குழந்தையை கடத்தி சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் செடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீசார்

இது குறித்து சரிதா அமீன்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை காணாமல் போனதே தீவிரமாக எடுத்துக்கொண்டு 25 சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் அமீன்பூர், சந்தானகர், படஞ்சேரு போலீசார் உட்பட 5 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் குழந்தை காணாமல் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. குழந்தையை கடத்திச் செல்லும் பெண் மேடக் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

கைது

உடனடியாக மேடக் போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு அவர்களது உதவியுடன் நாராயண் கேட் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை பிடித்தனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் மேடக் பகுதியை சேர்ந்த கங்கா மணி (44) என தெரிய வந்தது.

போலீசார் குழந்தையை மீட்டு கங்கா மணியை கைது செய்தனர். போலீசார் குழந்தையை அமீன் பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அவரது தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவரது தாயிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

X