கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: 100% இலக்கை எட்டி சாதனை படைத்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பயிற்சி பெற்ற மருத்துவர்களின் கண்காணிப்பில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
PM Modi
Published on: 

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 9 மாதங்களுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ், 14 வயதுடைய சிறுமிகளுக்கு அரசுப் பொது சுகாதார நிலையங்களில், பெற்றோரின் ஒப்புதலுடன் இலவசமாக, பாதுகாப்பான முறையில் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஆண்டுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட சுமார் 1.2 கோடி சிறுமிகளில் 87 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய 6 மாநிலங்கள் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 29.33 லட்சம், பீகாரில் 13.70 லட்சம், குஜராத்தில் 7.75 லட்சம் சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76.12 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற மருத்துவர்களின் கண்காணிப்பில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எஞ்சியுள்ள தகுதியான சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தி கருப்பைவாய் புற்றுநோய் இல்லாத எதிர்காலத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.

மத்திய சுகாதாரத்துறையின் இந்த சாதனையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,"சுகாதாரத் துறையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் நமது பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்.

சிறுமிகளை கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர் காலத்தை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் ஒரு முக்கிய நடவடிக்கை. இந்த வியக்கத்தக்க சாத னையைச் சாத்தியமாக்கிய அனைவரையும் நான் பாராட்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

X