பஞ்சாபில் காதலித்து கரம்பிடித்த இளைஞர் ஆணவக்கொலை- பெண் வீட்டார் வெறியாட்டம்

ஜக்ஜீத் சிங், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தன் காதலியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Honor killing in Punjab
Published on
Summary

தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

கொல்லப்பட்ட ஜக்ஜீத் சிங், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தன் காதலியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இவர்களது திருமணத்திற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

கத்திகளுடன் பாய்ந்த அண்ணன்கள்

நேற்று ஜக்ஜீத் சிங் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் திடீரென கத்திகளுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். சரமாரியாக வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜக்ஜீத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் வழக்குப் பதிவு

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரி, ஜக்ஜீத் சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆணவக்கொலை கோணத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com