திருப்பதியில் பலத்த மழையிலும் தரிசனம் செய்து வரும் பக்தர்கள்

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.
திருப்பதியில் பலத்த மழையிலும் தரிசனம் செய்து வரும் பக்தர்கள்
Published on: 
Summary

பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்தாலும் காலை முதல் பெய்து வரும் மழையில் நனைந்தபடி அவதி அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கியது .நேற்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது.

பிரம்மோற்சவ விழா

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

விடுமுறை

நேற்று நவராத்திரி பிரம்மோற்சவ விழா மற்றும் விடுமுறை முடிந்ததால் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது. நேரடி இலவச தரிசனத்தில் 3 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர்.

மழை

இன்று காலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்தாலும் காலை முதல் பெய்து வரும் மழையில் நனைந்தபடி அவதி அடைந்தனர்.

திருப்பதியில் நேற்று 83,745 பேர் தரிசனம் செய்தனர். 19,391 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.99 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

X

Maalai Malar
www.maalaimalar.com