

2029-க்குள் பஞ்சாபை போதைப்பொருள் இல்லா மாநிலமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த நிலையில், அதுவரை அவர் பதவியில் இருக்கமாட்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர்.,
“போதைப்பொருள் பிரச்சினைக்கு அவர்கள் என்ன காலக்கெடுவை நிர்ணயித்தார்கள்?... மூன்று ஆண்டுகளுக்குள்? இன்னும் மூன்று ஆண்டுகளில், அமித் ஷா உள்துறை அமைச்சராகக் கூட இருக்க மாட்டார். இந்த அரசு ஒரு வருடம் கூட நீடிக்காது என்பது என் கணிப்பு.” என தெரிவித்தார்.
மேலும் ஆம் ஆத்மியை விமர்சித்த ராகுல் காந்தி, பஞ்சாப் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையால் ஆளப்படாமல், தேசிய தலைநகரில் இருந்து பாஜகவால் ஆளப்படுவதாக விமர்சித்தார்.
“இங்குள்ள மக்களுக்கு பஞ்சாபிற்காக உழைக்கும் ஒரு அரசு தேவை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பஞ்சாப் அரசை டெல்லியிலிருந்து நடத்த முடியாது. எங்கள் கட்சி பஞ்சாப் அரசை பஞ்சாபிற்குள்ளிருந்தே நடத்தும்.
எங்கள் முதலமைச்சர் உண்மையாகவே பஞ்சாபின் முதலமைச்சர்,” என்று அவர் கூறினார்.