ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

வழிகாட்டுதல் செயற்கைக்கோளான என்.வி.எஸ்.03 யை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி.எப்-18 ராக்கெட் இன்று இரவு 11.51 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
GSLV-F18 rocket
Published on: 
Summary

நிர்ணயிக்கப்பட்ட 24 மணிநேரம் கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2-வது ஏவுதளத்திலிருந்து, வழிகாட்டுதல் செயற்கைக்கோளான என்.வி.எஸ்.03 யை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி.எப்-18 ராக்கெட் இன்று இரவு 11.51 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் நேற்று இரவு 11.51 மணியளவில் தொடங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 24 மணிநேரம் கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று இரவு 11.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X