விண்ணில் பாயத் தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-18 ராக்கெட்!

கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
GSLV F-18
Published on: 

பூமியை கண்காணிக்கும் 'என்.வி.எஸ்-3' செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் மூலம் வருகிற 30-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

விண்ணில் உள்ள கண்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் 'விண்ணில் உள்ள கண்' என்று அழைக்கும் 'ஈ.ஓ.எஸ்-05' செயற்கைக்கோள், இந்தியாவின் முதல் புவி ஒத்திசைவு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.

இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப்-17 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போது அங்கிருந்து படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை கொண்ட இந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 ரக ராக்கெட்டுகள், கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

'நேவிக்' அமைப்பு

இந்தியாவின் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்' வலுப்படுத்த, என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.எல்.வி-எப் 18 ராக்கெட் மூலம் வருகிற 30-ந்தேதி இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அமெரிக்காவின் 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' (ஜி.பி.எஸ்.) போன்றே,'நேவிக்' அமைப்பும் இந்தியா முழுவதற்கும், அதன் எல்லைகளுக்கு அப்பால் சுமார் 1,500 கி.மீ தூரம் வரையிலும் இருப்பிடம் மற்றும் நேரத்தகவல்களை வழங்குகிறது.

விண்ணில் ஏவ திட்டம்

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியதாவது:-

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நீண்டகாலமாக தள்ளிவைக்கப்பட்ட உள்நாட்டு வழிகாட்டு செயற்கைக் கோள் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் கடந்த 15-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது, வருகிற 30-ந்தேதிக்கு விண்ணில் ஏவ உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com