கல்லூரி மாணவர்களுக்கு கூகுளின் மெகா சலுகை: ரூ.4,000 மதிப்பிலான கூகுள் AI பிளஸ் சேவை 1 வருடத்திற்கு இலவசம்!

மாணவர்கள் தங்களது கல்லூரி பாடத்திட்டங்களை எளிதாகப் புரிந்து கொள்ள இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Google Gemini
Published on

இந்தியக் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் https://gemini.google/students ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீடு செய்துள்ளது. வழக்கமாக ஆண்டிற்கு ரூ.4,000 கட்டணத்தில் வழங்கப்படும் கூகுள் AI பிளஸ் சேவையை, தகுதிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு 1 ஆண்டிற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலவச கூகுள் AI பிளஸ் திட்டம்

மாணவர்கள் தங்களது கல்லூரி பாடத்திட்டங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த சிறப்புச் சலுகை பெரிதும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பற்றி பார்க்கலாம்.

*கூகுளின் அதிநவீன AI மாடலான Gemini Omni-ஐப் பயன்படுத்தும் வசதி.

*மாணவர்களின் கல்லூரி ஆவணங்கள் மற்றும் திட்டங்களைச் சேமிக்க 400 GB சேமிப்பகம்.

*சாதாரண பயனர்களை விட 2 மடங்கு கூடுதல் பயன்பாட்டு வரம்புகள்

*வகுப்புக் குறிப்புகளைப் பதிவேற்றி, தனிப்பயனாக்கப்பட்ட படிப்பு வழிகாட்டிகள் மற்றும் மாதிரி வினாடி வினாக்களை உருவாக்கும் வசதி.

* AI உடன் நேரடி குரல்வழியில் உரையாடி பாடங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் அம்சம்.

மாணவர்கள் இச்சலுகையைப் பெறுவது எப்படி?

18 முதல் 24 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் https://gemini.google/students என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களது மாணவர் அடையாளச் சான்றை உறுதிசெய்வதன் மூலம் இந்த 1 வருட இலவசச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com