'வாரிசு' படத்தில் வரும் கும்பே அருவியில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி

வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
'வாரிசு' படத்தில் வரும் கும்பே அருவியில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி
Published on

மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

அப்போது இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com