ராஜஸ்தானில் கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை: காவல் துறை தீவிர விசாரணை

வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணையானது தொடங்கப்பட்டுள்ளது.
Rajasthan
Published on: 

ராஜஸ்தானில் கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணையானது நடைப்பெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம், தௌசா மாவட்டத்தில் 16 வயது கர்ப்பிணி சிறுமியியை மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தை அடுத்து அப்பெண்ணிற்கு அங்கேயே பிரசவ வலி ஏற்ப்பட்டு குழந்தை பிறந்துள்ளது.புதிதாகப் பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது .

ராஜஸ்தான் மாநிலம், தௌசா மாவட்டம், கோல்வா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட டெல்லி-மும்பை விரைவுச்சாலை அருகே இந்தச் சம்பவமானது நடந்துள்ளது

சம்பவம் அன்று ஒரு கும்பலால் சிறுமி கடத்தப்பட்டு, டெல்லி-மும்பை விரைவுச்சாலைக்கு அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.இந்த நிலையில் அப்போதே பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே அவருக்கு குழந்தை பிறந்ததுள்ளது.

இதையடுத்து சிறுமி மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்றுள்ளார். அங்குப் புதிதாகப் பிறந்த குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மருத்துவமனை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, காவல் துறை இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்திற்கு முரணான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஒரு ஆண் நண்பர் அவரை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. பெயர் குறிப்பிடப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தௌசா காவல் கண்காணிப்பாளர் குந்தன் கன்வாரியா தெரிவித்தார். மேலும் விசாரிக்க ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com