குல்மார்க்கில் தீ விபத்து: பனிக்கட்டிகளை வீசி தீயை அணைக்க முயன்ற பயணிகள்- வைரலாகும் வீடியோ

குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் தீ விபத்து.தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தகவல்.
குல்மார்க்கில் தீ விபத்து: பனிக்கட்டிகளை வீசி தீயை அணைக்க முயன்ற பயணிகள்- வைரலாகும் வீடியோ
Published on: 

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பனிக்கட்டிகளை தூக்கி எரிந்து தீயை அணைக்க முயன்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com