போலி அடையாளத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகளை ஏமாற்றிய வாலிபர் - 25 பெண்கள் மோசடி அம்பலமாகி கைது!

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என பொய் சொல்லி கோடிகளை சுருட்டிய பிரகர் திரிவேதி - உ.பி. மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் விசாரணை.
 BJP MLA Daughter Cheated
PrakharTrivedi
Published on

உத்தரபிரதேசம் சேவதா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் திவாரியின் மகளை திருமணம் செய்த வாலிபர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என பொய் கூறி நடத்திய இந்த மோசடியில் தற்போது மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி அறிமுகத்தில் திருமணம்:

உத்தரப் பிரதேசம் மாநிலம்,சேவதா தொகுதி பா.ஜ.கஎம்.எல்.ஏ.வாக இருப்பவர் கியான் திவாரி. இவரது மகள் பிரக்யா. இவர் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் திரிவேதியின் மகன் பிரகர் திரிவேதியை கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு மும்பையில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அதிபர் என மனைவியிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவரது குடும்பத்தினருக்கு உள்ளூரில் நல்ல மரியாதை இருப்பதால் கியான் திவாரி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

25 பெண்கள் மோசடி அம்பலம்:

சமீபத்தில் தனது மருமகனின் நடவடிக்கைகள் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகள் வெளிவந்தது. இதனை அறிந்த கியான் திவாரி தனது மருமகனின் கடந்த காலத்தை பற்றி விசாரணை நடத்தினார்.

அதில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதி படைத்த பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது.

திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்.

எம்.எல்.ஏ. கியான் திவாரியின் வீடியோ பதிவு:

இது குறித்து சமூக வலைத்தளங்களில் மருமகனின் நடத்தை குறித்து வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் போலி அட்டைகளை தயார் செய்து தனது மகளை திருமணம் செய்வதற்கு முன்பு பல மாநிலங்களில் 25 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்து இருக்கிறார்.

தற்போது அவர்களது குடும்ப உறவை துண்டித்து விட்டு மகளை வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறேன். பிரகர் திரிவேதி தனது குற்ற பின்னணி மற்றும் வழக்கு களை மறைத்து தனது மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் மக்கள் பிரதிநிதிதியாக உள்ள தனது நற்பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறேன் என வீடியோவில் தெரி வித்துள்ளார்.

மோசடி வாலிபர் கைது:

இது சம்பந்தமாக உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஜ் திரிவேதி மற்றும் பிரகர் திரிவேதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவிலும் பல பெண்கள் புகார் செய்ததால் அந்த மாநில போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் மகளை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com