

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை மற்றும் முக்கிய வங்கிகளை போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் போன்களை ஹேக் செய்து அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் ஃபயர்பேஸ்-ல் (firebase) கணக்கு வைத்துள்ள நூற்றுக்கணக்கான கணக்குகளை முடக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
செயலிகளை உருவாக்கவும் இணையதளங்களை ஹோஸ்ட் செய்யவும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான டெவலப்பர்களால் ஃபயர்பேஸ் பயன்படுத்தப்படுகிறது. இது கூகுளின் கிளவுட் வணிகத்தின் ஒரு பகுதியாகும். இது சமீபத்திய காலாண்டில் கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.
இந்த ஃபயர்பேஸ் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் (செயலி, இணையதளம் உருவாக்கியுள்ளவர்கள்), ஆண்ட்ராய்டு அடிப்படையிலான வங்கி சேவைகள் போல் வேடமிட்டு, குறிப்பாக கடன் அட்டைகளை (credit card) கொண்ட ஆண்ட்ராய்டு பயனர்களைக் குறிவைக்கின்றனர்.
புதிய கடன் அட்டைகள், வெகுமதிப் பெறுதல்கள் அல்லது கடன் வரம்பு மேம்படுத்தல்கள் போன்ற சலுகைகளை விளம்பரப்படுத்தி மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஈர்த்துள்ளதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) தெரிவித்துள்ளது.
இணையவழி மோசடிகள் இந்தியாவின் மிக முக்கியமான சட்ட அமலாக்க சவால்களில் ஒன்றாக மாறியுள்ளன. அரசுத் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் எனக் கூறப்படும் சம்பவங்களால் இந்தியர்கள் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக, மோசடி செய்பவர்களின் இணையதளங்களை அகற்றுமாறு 14C வலியுறுத்தியுள்ளது.
ஃபயர்பேஸில் உள்ள 57 வலைத்தளங்களும் தரவுத்தளங்களும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் கைபேசிகளிலிருந்து முக்கியமான நிதி தகவல்களைத் திரட்டியதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து ஆல்பபெட் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் கூறுகையில், ஃபிஷிங், மால்வேர் மற்றும் நிதி மோசடிக்காக எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை தடைசெய்யும் கடுமையான கொள்கைகளை எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க I4C உள்ளிட்ட சட்ட அமலாக்கத் துறைகளுடன் இணைந்து செயல்பட கூகுள் தாயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மார்ச் 2026-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் நிகழ்நேரப் பணப்பரிவர்த்தனை அமைப்பு மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட 242 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டன. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சந்தைகளில் ஒன்றாக ஆக்குகிறது.
அகற்றப்படக் கோரப்பட்ட 57 இணையதளங்கள் மற்றும் தரவுத்தளங்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி வங்கிகளைப் போல போலியாக உருவாக்கி ஃபயர்பேஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் திட்டமான பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் சுமார் 2,000 இந்திய ரூபாய் வழங்கப்படுகிறது.
இதை நோட்டம் விட்ட ஃபயர்பேஸ், அதனை பயன்படுத்தும் பயனர்கள், பணம் பெறுபவர்களுக்கு அவர்களின் பணத்தைப் பெறுவதற்கு உதவுவதாக இணையதளங்களின் மூலம் உறுதியளித்து, பின்னர் பணத்தை பெருவதற்காக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளது.
இதையடுத்து அந்த மோசடி செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்தபோது, அவர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கைபேசி ஹேக் செய்யப்பட்டு, மோசடிக்காரர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மற்ற செயலிகளை அணுகி, வாடிக்கையாளர்களின் நிதி மோசடி செய்ய வழிவகை செய்கிறது.
இதுகுறித்து இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ஃபயர்பேஸ் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகள் மீது ஏறக்குறைய முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் "ஆண்ட்ராய்டு காட் மோடு" என இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் பரவலாக அழைக்கப்படும் இதுபோன்ற மோசடி சேவைகளை குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது.
மேலும் இந்த விதமான தீங்கிழைக்கும் செயலிகள் பெரும்பாலும் வங்கி, அரசு மற்றும் பொதுப் பயன்பாட்டுத் தளங்கள் போன்ற நம்பகமான சேவைகளைப் போல் நடித்து, இணைப்புகள் மூலம் பயனர்களை ஏமாற்றி அவற்றை நிறுவச் செய்கின்றன,” எனவும் இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக் குறிப்பு தெரிவித்தது.