இளம்பெண் பிணத்தை தோண்டி தலை துண்டித்து மாந்திரீக பூஜை

திருமணமாகாத கன்னிப்பெண் இறந்ததால் அவரது உடலை மாந்திரீகம் செய்பவர்கள் தோண்டி எடுத்து சென்று விடுவார்கள் என எண்ணி 21 நாட்கள் இரவு தினமும் காவல் காத்து வந்தனர்.
இளம்பெண் பிணத்தை தோண்டி தலை துண்டித்து மாந்திரீக பூஜை
Published on: 
Summary

நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அவரது தலையை துண்டித்துக் கொண்டு உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

தெலுங்கானா மாநிலம், நவரங்பூர் மாவட்டம், நரசிம்ம குடாவை சேர்ந்தவர் நிலாத்ரீ மாஜி (வயது 27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நோயால் பாதிக்–கப்பட்டு இருந்த நிலாத்ரி மாஜி கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இறந்–தார். உறவினர்கள் அவரது உடலை சுடுகாட்டில் புதைத்தனர்.

கன்னிப்பெண்

திருமணமாகாத கன்னிப்பெண் இறந்ததால் அவரது உடலை மாந்திரீகம் செய்பவர்கள் தோண்டி எடுத்து சென்று விடுவார்கள் என எண்ணி 21 நாட்கள் இரவு தினமும் காவல் காத்து வந்தனர். அதன் பிறகு காவலை கைவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நிராத்ரி ராஜுவின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அவரது தலையை துண்டித்துக் கொண்டு உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் தலை இல்லாமல் உடல் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவரது உறவினர்கள், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நரசிம்மகுடா போலீசில் புகார் செய்தனர். போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X