ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படை .. லஷ்கர் இ தொய்பா தளபதி சுட்டுக் கொலை

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி ஆவான்.
யாசிர்
யாசிர்
Published on
Summary

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா தளபதி யாசிர் சுட்டுக்கொல்லப்பட்டான்.

யார் இந்த யாசிர்?

2025ஆம் ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியச் சூத்திரதாரிகளில் ஒருவன் 'ஹாஷிம் மூசா' என்றழைக்கப்படும் சுலைமான் மூசா. இவன் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி ஆவான்.

பஹல்காம் தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே, ஸ்ரீநகரின் டாச்சிகாம் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய என்கவுண்டரில் மூசா சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த சுலைமான் மூசாவுடைய குழுவில் இருந்தவன் யாசிர். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு அக்குழுவிலிருந்து பிரிந்த யாசிர், தளபதி அந்தஸ்துடன் தனிப்படையாக இயங்கி வந்தான்.

என்கவுண்டர்

மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள யூஸ்மார்க் மலைப்பகுதியில் இவனது நடமாட்டம் அதிகரித்துள்ளதை உளவுத்துறை கண்டறிந்தது.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் மற்றும் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர் இன்று அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் யாசிர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளான்.

விசாரணை

காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாசிரின் வீழ்ச்சி லஷ்கர் அமைப்புக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கொல்லப்பட்ட யாசிருடன் தொடர்பில் இருந்த பிற பயங்கரவாதிகள், சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களில் அவனுக்கு இருந்த பங்கு குறித்துப் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com