தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் கட்சியில் இருந்து விலகல்!

அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் கட்சியில் இருந்து விலகல்!
Published on: 

மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என, பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

சனௌர் தொகுதியின் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, தனது ராஜினாமா கடிதத்தை, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ளார்.

சமனா தொகுதியின் சேதன் சிங் ஜௌரமஜ்ரா தனது ராஜினாமா முடிவை சமூக வலைதளப் பதிவுகள் மூலம் அறிவித்துள்ளார்.

2027 சட்டமன்ற தேர்தல்

2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அடுத்த நாளே இந்த அதிரடி விலகல் நிகழ்ந்துள்ளது.

கட்சி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருவரது பெயரும் இடம்பெறவில்லை. மேலும், இவர்களது தொகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமித்ததால், தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரும் விலகியுள்ள நிலையில், விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X