டெல்லி: இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சக ஊழியர்கள்.. உடந்தையாக இருந்த பெண் ஊழியர்கள்

இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
Published on: 
Summary

டெல்லியில் சக ஊழியர்களால் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.

கிழக்கு டெல்லியின் ப்ரீத் விஹார் பகுதியில் உள்ள சுல்தானேட் கஃபேயில் 22 வயதான பெண் பணியாற்றி வந்தார்.

இரவு விருந்து

கடந்த திங்கள்கிழமை இரவு கஃபே மூடப்பட்ட பிறகு, ஊழியர்கள் அங்கு ஒன்றுகூடி விருந்து கொண்டாடினர்.

அவர்கள் இரவு முழுவதும் மது அருந்தியும், அதிகாலை 3.30 மணி வரை நடனமாடியும் பொழுதைக் கழித்துள்ளனர்.

இந்த நேரத்தில், இரண்டு ஆண் ஊழியர்கள் அந்த 22 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

பெண் ஊழியர்கள் உடந்தை

மற்ற பெண் ஊழியர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடந்தையாக இருந்து இந்தக் குற்றத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் நேற்று காலை 5.45 மணிக்கு காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார்.

6 பேர் மீது வழக்குப் பதிவு

பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இரண்டு பெண்கள் உட்பட அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள மீதமுள்ள மூன்று குற்றவாளிகளைத் தேடும் பணிகளை சிறப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.

பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து வரும் காவல்துறையினர், நீதிபதி முன்னிலையில் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

X