

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதலைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு மற்றும் குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் முந்தைய பாஜக அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளம்பரங்கள் வெளியிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர் இருவருக்கும் எதிராக பாஜக வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, இருவருக்கும் எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது அமைச்சரவை மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் கட்சியான பாஜக எப்படி அவதூறு வழக்கு தொடரும் என்ற மனுதாரர்களின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.