மணிப்பூர் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு- 370 பேர் மருத்துவமனையில் அனுமதி

முதலில் 8 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
manipur
Published on: 

மணிப்பூர் மாநிலம் சாந்தனூர் மாவட்டம் சாக்பிகா ரோங் பகுதியை சேர்ந்த வர்கள் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் முதலில் 8 பேர் பலியானார்கள். தற்போது பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

16 பேர் பலி

மணிப்பூரில் கள்ளச்சாரயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. 370-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர்

கடந்த 15-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் இந்த கள்ளச்சாராய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இறந்தவர்க ளில் பெரும்பாலானோர் சாக்பிகாரோங் பகுதியை சேர்ந்தவர்கள். ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருபவர்களை மணிப்பூர் முதல்வர் யும்நாம் கெம்சந்த் சிங் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை

சிஜா ஆஸ்பத்திரியில் 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளும், பாம்பினா ஆஸ்பத்திரியில் 40-க்கும் மேற்பட்டவர்களும் அனும திக்கப்பட்டு உள்ளனர்.

X