

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமிக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இன்று மதியம் 1 முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரம் பல்வேறு மலர்கள், இலைகள் கொண்டு புஷ்ப யாகம் நடைபெறுகிறது. மாலை சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புஷ்ப யாகத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் ஆர்ஜிதா சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதியில் நேற்று 82,173 பேர் தரிசனம் செய்தனர்.27, 058 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.95 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.21 லட்சம் லட்டுகள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.