ராஜஸ்தானில் தலித் சிறுவனை நிர்வாணமாக்கி நடனமாட சொல்லி வீடியோ எடுத்த கொடூரம்

சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது.கைது செய்யப்பட்ட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
stripping and assaulting Rajasthan Scheduled Caste boy
Published on

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயது பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ வைரலானது அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com