அர்னாப் புயல் பாதிப்பு எதிரொலி: தமிழகத்தில் இருந்து ஆந்திரா விரைகிறது 500 மின் பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு

எரிசக்தி துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
Andhra Minister- TN CM Vijay
Published on: 

ஆந்திராவில் கடந்த வாரம், அர்னாப் புயல் தாக்கியதில் ஏராளமான மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

அப்போது, ​​மின் உள்கட்டமைப்பைச் சீரமைக்கத் தமிழ்நாடு அரசின் உதவியை அவர் கோரினார். புயல் சூறாவளியால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதை விளக்கிய அவர், சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான பணியாளர்களையும் எந்திரங்களையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு முதலமைச்சர் விஜய் சாதகமான பதிலை தெரிவித்தார். உடனடியாக மின் கம்பங்களை சரி செய்ய சிறப்பு குழுவை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதன்படி இன்று காலையில் 500 மின் பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, மின்சார உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 15 லாரிகள் புறப்பட்டு சென்றன. இவற்றை எரிசக்தி துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

X