

விவசாயிகள் தங்களது பயிர் இழப்புகளை 'கர்ஷக்' இணையதளத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை இயக்குநர் மனசீர் ஜிலானி தெரிவித்தார்.
அர்னாப் புயல் நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதில் 7 பேர் பலியாகி உள்ளனர். சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் 249 மண்டலங்களில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களைக் கடுமையாகப் பாதித்தது. கடலோர ஆந்திராவில், 2,747 கிராமங்களைச் சேர்ந்த 4,62,923 விவசாயிகள் புயலால் பாதிக்கப்பட்டனர்.
வேளாண்மைத் துறையின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, 3,03,978 ஹெக்டேர் நெல், 273 ஹெக்டேர் மக்காச்சோளம், 3,385 ஹெக்டேர் சிறுதானியம் மற்றும் 1,036 ஹெக்டேர் பருத்தி சேதமடைந்துள்ளன. இதர பயிர்களையும் சேர்த்து, மொத்தம் 3,08,791 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
விவசாயிகள் தங்களது பயிர் இழப்புகளை 'கர்ஷக்' இணையதளத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை இயக்குநர் மனசீர் ஜிலானி தெரிவித்தார். விவசாயி இணையதளப் பக்கத்தைத் திறந்து, கியுஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, தனது ஆதார் எண், கணக்கெடுப்பு எண், பாதிக்கப்பட்ட பகுதி போன்ற விவரங்களை உள்ளிட்டு, பயிரின் புகைப்படத்தைப் பதிவேற்றி, ஓடிபி மூலம் சுயமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அவர் கூறினார்.