நாட்டிலேயே முதல் முறை.. பார்க்கின்சன் நோய்க்கு ரோபோ உதவியடன் டி.பி.எஸ் அறுவை சிகிச்சை வெற்றி வெற்றி

சிறிய மின் தூண்டல்களை அனுப்பி, மூளையில் உள்ள நரம்பு செல்கள் மற்றும் வேதிப்பொருட்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றன.
ரோபோடிக் டிபிஎஸ் அறுவை சிகிச்சை
Published on: 
Summary

டெல்லி எய்ம்ஸில் நாட்டின் முதல் ரோபோடிக் டிபிஎஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), இந்திய மருத்துவத்துறையில் ஒரு புதிய மைல்கல்லை நாட்டியுள்ளது.

வெற்றி

நாட்டில் முதன்முறையாக, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு, ரோபோ உதவியுடன் ஆழ் மூளைத் தூண்டல் (DBS) அறுவை சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

பார்க்கின்சன் நோய் என்பது மூளையில் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் டோபமைன் வேதிப்பொருளை உருவாக்கும் நரம்பு செல்கள் படிப்படியாகச் சேதமடைவதால் ஏற்படும் ஒரு நரம்பு மண்டலக் கோளாறு ஆகும்.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்டனர்.

இந்த அறுவை சிகிச்சையில், எய்ம்ஸ் பேராசிரியர் பி. சரத் சந்திரா, டெல் அவிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் இடோ ஸ்ட்ராஸ், பேராசிரியர் இலா வர்ஷி, பேராசிரியர் மஞ்சுரி திரிபாதி மற்றும் எய்ம்ஸ்-இன் நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் துறைகளின் நிபுணர்கள் ஈடுபட்டனர்.

எப்படி மேற்கொள்ளப்பட்டது?

ரோபோ வழிகாட்டுதல் முறையானது, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் தூண்டல் மின்முனைகளை மிகத் துல்லியமாகப் பொருத்த அனுமதிக்கிறது.

இந்த மின்முனைகள் சிறிய மின் தூண்டல்களை அனுப்பி, மூளையில் உள்ள நரம்பு செல்கள் மற்றும் வேதிப்பொருட்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றன.

இதன் மூலம், நரம்பியல் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றன. பேஸ்மேக்கர் போன்ற ஒரு சிறிய கருவி, மார்பின் மேற்பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்தப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு கம்பி மூளையில் உள்ள மின்முனைகளுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.

பயன்

இந்த DBS சிகிச்சையானது பார்க்கின்சன் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அத்தியாவசிய நடுக்கம், டிஸ்டோனியா (மீஸ் சிண்ட்ரோம் போன்றவை), வலிப்பு (காக்காய் வலிப்பு), அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் (OCD) மற்றும் டூரெட் சிண்ட்ரோம் போன்ற பிற நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் நன்மை அளிக்கிறது.

X