கட்டாய ஓய்வு ஆணை தண்டனைகுரியது அல்ல - உச்சநீதிமன்றம்

ஒவ்வொரு ஊழியரின் செயல்திறனும் தனித்தனியாகவே மதிப்பிடப்படுகிறது.
 Supreme Court
Published on: 

கட்டாய ஓய்வு ஆணை (Compulsory Retirement) என்பது ஒரு அரசு ஊழியருக்கு வழங்கப்படும் தண்டனையோ அல்லது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலோ அல்ல என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது

2017 ஆம் ஆண்டு சத்திஸ்கர் அரசாணை ஒன்றின்படி 14 ஊழியர்களில் ஐந்து பேருக்கு கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை உறுதிசெய்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு, அந்த ஊழியரை தொடர்ந்து பணியில் வைத்திருப்பது இனி பொது நலனுக்கு உகந்ததல்ல என்ற தகுந்த அதிகாரியின் முடிவின் அடிப்படையில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

திறமையின்மை அல்லது போதிய நிர்வாகப் பங்களிப்பு இல்லாத காரணத்தால், ஒரு ஊழியரைத் தொடர்ந்து பணியில் நீட்டிக்கச் செய்வது பொது நலனுக்கு உகந்தது அல்ல என்று அரசு கருதினால், இந்த முடிவு எடுக்கப்படுகிறது.நிர்வாக அமைப்பைத் தூய்மைப்படுத்தவும், அதன் திறனை மேம்படுத்தவும் தகுதியற்ற ஊழியர்களை கண்டறிந்து கட்டாய ஓய்வு அளிக்கும் முழு அதிகாரம் அரசுக்கு உண்டு

விருப்ப ஓய்வு தண்டனையோ , களங்கமோ அல்ல

கட்டாய ஓய்வு அளிப்பது என்பது ஊழியரின் நடத்தை மீதான குற்றச்சாட்டோ அல்லது தவறான நடத்தைக்கான தண்டிக்கும் நடவடிக்கையோ அல்ல.

இது ஊழியருக்கு வழங்கப்பட வேண்டிய முழு ஓய்வூதியம் மற்றும் பிற பணப்பலன்களைப் பாதிக்காது என்பதால், இதனை ஒரு ஒழுங்கு நடவடிக்கை ஆகக் கருத முடியாது என்று தெரிவித்துள்ளது.

ஊழியர்களைக் கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கான 2017 ஆம் ஆண்டு அரசு சுற்றறிக்கையை உறுதிசெய்த ஒற்றை நீதிபதி அமர்வின் உத்தரவை நிலைநிறுத்திய சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் ஏப்ரல் 12, 2023 தேதியிட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

தன்னைப் போன்ற தகுதியுடைய மற்றொரு ஊழியருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்படவில்லை, எனவே எனக்கு மட்டும் அளித்தது தவறு என்று கூறி இந்த உத்தரவைத் தள்ளுபடி செய்யக் கோர முடியாது.

ஒவ்வொரு ஊழியரின் செயல்திறனும் தனித்தனியாகவே மதிப்பிடப்படுகிறது. ஒருவருக்குச் சலுகை வழங்கப்பட்டது என்பதைக் காரணம் காட்டி, சட்டத்திற்குப் புறம்பான சமத்துவத்தை யாரும் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது

கட்டாய ஓய்வு என்பது அரசு ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஆயுதம் அல்ல; மாறாக, பொது நிர்வாகத்தின் திறனைப் பாதுகாப்பதற்காக அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தார்மீக நிர்வாக அதிகாரம் என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

X