

புனேவிலிருந்து ஐதராபாத் நோக்கி சென்ற இண்டிகோ விமானம் ஒன்று பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியது.
இண்டிகோவின் '6E352' விமானம் புனேவிலிருந்து ஐதராபாத் நோக்கி இன்று காலை புறப்பட்டது.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்தின் மீது ஒரு பறவை மோதியது. சுதாரிப்புடன் செயல்பட்ட விமானி, உடனடியாக ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
இதனால் பயணிகளும் விமான ஊழியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தரையிறங்கிய பிறகு, நிபுணர்கள் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுகளின்போது, விமானத்தின் முன்பகுதி சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இது பறவை மோதியதால் ஏற்பட்டதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது . விமானியின் சமயோஜித நேரத்திலான நடவடிக்கை ஒரு பெரும் விபத்தைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.