கேரளத்தில் தேங்காய் பூங்கா..! வளர்ச்சி நோக்கிய முடிவு

வர்த்தகத்தை மேம்படுத்த தேங்காய் பூங்கா திட்டமானது தொடங்கப்படவுள்ளதாக முதல்-மந்திரி சதீஷன் தெரிவித்துள்ளார்.
V. D. Satheesan
Published on

விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு

கேரளத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் தேங்காய் பூங்கா அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சதீஷன் கூறியுள்ளார்.

பாரம்பரியம் டூ அறிவியல் மாற்றம்

தென்னை விவசாயத்தை பாரம்பரிய முறையில் இருந்து அறிவியல் முறைக்கு மாற்றுவதன் மூலம் தென்னை விவசாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும். அதன் ஒரு செயல்முறையே இந்த தேங்காய் பூங்கா என்று தெரிவித்தார்.

தேங்காய் சாகுபடியில் முன்னோடி

இது குறித்து பேசிய கேரளம் முதல் மந்திரி, வரலாற்று ரீதியாக தேங்காய் சாகுபடியில் நாம்தான் முன்னோடியாக இருந்து வருகிறோம். ஆனால், உற்பத்தியில் பின்தங்கியுள்ளோம். எனவே மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த தேங்காய் துறையை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு தேங்காய் பூங்கா திட்டம் உதவும்.

தேங்காயை நவீன முறையில் பதப்படுத்தி, மதிப்பு கூட்டி அதை உயர் தரத்தில் உருவாக்கினால் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய முடியும என்றும் தெரிவித்தார்.

தொழில்முனைவோர் ஈர்ப்பு

இந்த தேங்காய் பூங்கா அமைப்பதன் மூலம் மிகுதியான தொழில்முனைவோரை ஈர்க்க முடியும் அதன் மூலம் சிறந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக கேரளத்தை மாற்ற முடியும் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com