லண்டனுக்கு செல்ல முயன்ற சி.ஜே.பி. நிர்வாகி டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

சவுரவ் தாஸ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு சி.ஜே.பி கட்சி தலைவர் அப்ஜித் தீப்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Sourav Das
Published on: 

சி.ஜே.பி கட்சி இணை ஒருங்கிணைப்பாளருமான சவுரவ் தாஸ் லண்டன் செல்வ தற்காக நள்ளிரவு டெல்லி யில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார்.

அப்போது அதிகாரிகள் தன்னை தடுத்து நிறுத்திய தாக சவுரவ் தாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டத் தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) நிர்வாகி 3 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்க ளில் ஒருவரும், சி.ஜே.பி கட்சி இணை ஒருங்கிணைப்பாளருமான சவுரவ் தாஸ் லண்டன் செல்வ தற்காக நள்ளிரவு டெல்லி யில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அதிகாரிகள் தன்னை தடுத்து நிறுத்திய தாக சவுரவ் தாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக சவுரவ் தாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற் காக லண்டன் செல்லவிருந்த என்னை, இந்த அரசு டெல்லி விமான நிலை யத்தில் தடுத்து நிறுத்தி உள்ளது. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், எல்.எஸ்.இ மற்றும் எடின்பர்க் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் என்னை கரப்பான் பூச்சி ஜனதா இயக்கம் குறித்துப் பேச அழைத்தி ருந்தன.

ஆனால் இந்த அரசு நான் லண்டன் செல்வதைத் தடுத்து விட்டது. குடிவரவு சோதனை மையத்திற்குச் சென்றபோது எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளதை அறிந்தேன்.

கல்வியறிவு பெற்ற ஒரு இளைஞன், மற்ற அறிவு ஜீவிகளுடன் இணைந்து அறிவுசார் கலந்துரையாட லில் ஈடுபடுவதைக் கண்டு இந்த அரசு ஏன் இவ்வளவு அஞ்சுகிறது? நான் ஒரு நீரவ் மோடியாகவோ அல்லது விஜய் மல்லையாவாகவோ இருந்திருக்கலாம். வங்கி களில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை நான் கொள்ளைய டித்திருக்கலாம்.

இந்த நடவடிக்கை எனது பணிகளை தொடர்வதிலி ருந்து என்னைத் தடுக்காது. எதிர்காலத்தில் லண்டன், பாரிஸ் மற்றும் பிற இடங்க ளுக்குத் தொடர்ந்து பயணம் மேற்கொள்வேன் என்றார்.

சவுரவ் தாஸ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு சி.ஜே.பி கட்சி தலைவர் அப்ஜித் தீப்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும் போது, சவுரவ் தாஸ் பாஸ்போர்ட் டில் 7 ஆண்டுகளாக எந்தக் குளறுபடிகளையும் கண்ட றியாதவர்கள், சி.ஜே.பி அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும், அதில் சவுரவ் ஒரு முக்கிய முகமாக மாறிய பிறகு திடீரென இந்தக் குளறுபடிகளைக் கண்ட றிந்துள்ளனரா? என்று கூறி உள்ளார்.

அவர் கூறும் போது, சவுரவ் தாஸ் பாஸ்போர்ட் டில் 7 ஆண்டுகளாக எந்தக் குளறுபடிகளையும் கண்ட றியாதவர்கள், சி.ஜே.பி அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும், அதில் சவுரவ் ஒரு முக்கிய முகமாக மாறிய பிறகு திடீரென இந்தக் குளறுபடிகளைக் கண்ட றிந்துள்ளனரா? என்று கூறி உள்ளார்.

X