

சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை, பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) கட்டுப்பாட்டில் விமான நிலையங்களின் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பயண வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் பொருட்டு விமான நிலையங்களின் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை தனியார் நிறுவனங்களின் பொறுப்பில் விடும் முடிவு பரிசீலனையில் உள்ளது.
இருப்பினும், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட சேவைகள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் தொடர்ந்து செயல்படும்.
தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தின் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து மாற்றி, மற்றொரு தகுதியான தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி தனியார்வசம் ஒப்படைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மாநிலத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும் அவர் அதில் வலியுறுத்தினார். இந்நிலையில் அதை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம், பொதுத்துறை சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பயணிகளுக்கு அதிகப்படியான நிதிச் சுமையை ஏற்படுத்தாமல், பொது நலனைப் பாதுகாக்க வேண்டும் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.