

தீபாவளியை முன்னிட்டு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) நவம்பர் 8, 2026 அன்று ரயில் நேரங்களை மாற்றம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி மூன்று வழித்தடங்களில் மெட்ரோ சேவைகள் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கும் அதே வேளையில், அனைத்து வழித்தடங்களிலும் உள்ள முனைய நிலையங்களில் இருந்து கடைசி ரயில் புறப்படும் நேரம் ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று அனைத்து மெட்ரோ வழித்தடங்களின் முனைய நிலையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 10:00 மணிக்குத் தொடங்கும் (வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, அதாவது 08 நவம்பர் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, பிங்க் லைன் (மஜ்லிஸ் பார்க் - மஜ்லிஸ் பார்க்/ஷிவ் விஹார்), மெஜந்தா லைன் (பொட்டானிக்கல் கார்டன் - கிருஷ்ணா பார்க் எக்ஸ்டென்ஷன் & மஜ்லிஸ் பார்க் - தீபாலி சௌக்) மற்றும் கிரே லைன் (துவாரகா கக்ரோலா - தான்சா பேருந்து நிலையம்) ஆகியவற்றில், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக காலை 7:00 மணிக்குத் சேவையானது தொடங்கும்.
மெட்ரோ ரயில் சேவைகள், அன்று ஒரு மணி நேரம் முன்னதாக, காலை 6:00 மணிக்கே முனைய நிலையங்களிலிருந்து புறப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், தீபாவளி கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் உட்பட அனைத்து மெட்ரோ வழித்தடங்களின் முனைய நிலையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை, வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக, இரவு 10:00 மணிக்கே புறப்படும்.
பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்ரேஷ்ன் DMRC இணையதளத்தையும், அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை சர்பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது