பள்ளி தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சந்திரபாபு நாயுடு

குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
Chandrababu Naidu
Published on: 

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ரப்தாடு மண்டலப் பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவமானது நடந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் இருந்தபோது, ​​ஒருவர் இயந்திரமயமாக்கப்பட்ட மின்சார சங்கிலி ரம்பத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்துஇரு மாணவிகள் தாக்கியுள்ளார், இதில் ஒரு மாணவியின் நிலை கவலைகிடமாக உள்ளது.

தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

தாக்குதலுக்குப் பிறகு, அவர் பள்ளியிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் தலைமறைவாக உள்ளார், அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதல் மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

சம்பவத்தின் குற்றவாளியைக் கண்டறியவும், தாக்குதலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கான நோக்கம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்பு பெற்றோர் இடையே அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்

இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

அனந்தபூர் மாவட்டம், ராப்தாடுவில் உள்ள மாவட்ட பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் தாக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவியிடம், அவரது தாயார் முன்னிலையில் முதலமைச்சர் திரு. நாரா சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாகப் பேசினார். அச்சப்பட வேண்டாம் என்று அந்த மாணவிக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர், குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்

மாணவியைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், அரசு அவருக்கு முழுமையாகத் துணையாக நிற்கும் என்றும் அவர் நம்பிக்கை அளித்தார்.

மேலும், அந்த மாணவிக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ உதவிகள் குறித்து உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் பரிதாலா சுனிதாவிடமும் முதலமைச்சர் பேசினார். அதே தாக்குதலில் காயமடைந்த மற்றொரு மாணவிக்கும் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

X