வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு!

உள்நாட்டு எரிவாயு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு இறக்குமதி சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு!
Published on

மேற்காசியப் போர் காரணமாக விதிக்கப்பட்ட, வணிக எல்பிஜி சிலிண்டர்கள் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

போரால் எல்பிஜி விநியோகம் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் , தற்போது 50% அளவுக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு எரிவாயு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு இறக்குமதி சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவால் உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் செலவுகள் கணிசமாகக் குறையும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com