

2026-ம் ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்தப்படுகிறது.
பிப்ரவரி மாதம் நடந்த முதலாவது தேர்வு, அனைவருக்கும் கட்டாயம் ஆகும். 2-வது பொதுத்தேர்வு மே மாதம் நடக்கும். விருப்பம் உள்ளவர்கள் மட்டும் எழுதலாம்.
தோல்வியடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடத்தில் மதிப்பெண்ணை உயர்த்த விரும்புவர்கள் எழுதலாம். ஒரு மாணவர் 2-வது தேர்வில் 3 பாடங்கள் வரை எழுதி, எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதை தக்க வைத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், 10-ம் வகுப்புக்கான 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி தொடங்குவதாக சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது. மே 21-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.