Bye Bye அப்பா.. சிரித்தபடி பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண் - அதிரவைத்த வீடியோ - என்ன நடந்தது?

"நான் தற்கொலை செய்து கொள்ளப் போறேன்" என கத்தியபடி அருகில் இருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.
வீடியோ
வீடியோ
Published on
Summary

போனில் தனது தந்தையிடம் "பை, பை அப்பா" என சிரித்தபடி கூறியவாறு 21 வயது இளம்பெண் நதியில் குதித்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் தோதா மாவட்டத்தில் பிரேம் நகர் அருகே உள்ள சிவா தால் பாலத்தில் இருந்து நேற்று முன் தினம் நண்பகல் பாயல் தேவி என்ற அப்பெண் செனாப் நதியில் குதித்துள்ளார்.

என்ன நடந்தது?

நேற்று முன் தினம் காலை உள்ளூர் திருவிழாவிற்கு சென்ற அவர், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனை சென்று வருவதாக தனது தந்தை கிருஷண லாலுக்கு போன் செய்து கூறியுள்ளார்.

ஆனால் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவர் தனது கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பாயலின் துப்பட்டா பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது.

இதனால் அந்த நபர் வண்டியை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அதேநேரம் பாயல் திடீரென, "நான் தற்கொலை செய்து கொள்ளப் போறேன்" என கத்தியபடி அருகில் இருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர்

பை பை அப்பா

பாயலை அழைத்து வந்த நபர் தந்தை கிருஷ்ண லாலுக்கு போன் செய்து உங்கள் மகள் பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சிப்பதாகதெரிவித்துள்ளார்.

பதறிய தந்தை கிருஷ்ண லால், மகளிளின் போனுக்கு கால் அடித்துள்ளார். பாயல் போனை எடுக்க அவரிடம், "என்ன ஆச்சு, யாராவது உன்னை ஏதவாது செய்தார்களா?" என கிருஷண லால் கேட்டுள்ளார்.

அதற்குப் பாயல் தேவி, " அதெல்லாம் இல்ல அப்பா. இது என் வாழ்க்கை, எனக்கு இப்படிப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. பை பை அப்பா" எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் அங்கிருந்தவர்களுக்கு பை பை சொல்லியபடி நதியில் குதித்துள்ளார்.

பாயல் பாலத்தில் நின்றிருந்த காட்சிகளும், சிரித்தபடி அவர் பை, பை சொன்னதும், அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

பாயல் நதியில் குதித்த செய்தி அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை செனாப் நதியில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மருத்துவரைப் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலத்திற்கு வருவதற்குள் என்ன நடந்தது? என்பது குறித்துகாவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com