

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரத்தில் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன
அதேபோல புதுவையில் தட்டான்சாவடி தொகுதி, மேற்கு வங்கதத்தில் தொகுதி, அசாமில் ஒரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கடந்த 6 ஆம் தேதி அன்று மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டம் நந்திகிராம் சட்டசபை தொகுதியிலும், முர்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்ற 2 தொகுதிகளில், ராஜினாமா செய்த தொகுதியில் நந்திகிராமில் அவரது முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹாசி ராணிரத், பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.
சுவேந்து அதிகாரி முதல்வரான சில தினம் பின் சந்திரநாத் ரத் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவரது தாயாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் அணியின் வேட்பாளர், போட்டியில் இருந்து விலகியதால், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் சூழலில் பாஜக வேட்பாளர் ஹசிராணி ராத், நந்திகிராமில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அவர் 11 மணி நிலவரப்படி இதுவரை 24,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, 19,600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 4,300 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அசாம் மாநிலம் நகோன் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசை சேர்ந்த பிரத்யுத் போர்டோலாய் நடப்பாண்டின் தொடக்கத்தில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனால், காலியாக உள்ள நகோன் மக்களவை தொகுதியிலும் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
11 மணி நிலவரப்படி அசாமின் நாகோன் தொகுதியில் இதுவரை 1.1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள பாஜகவின் வேட்பாளர் தேவாசிஷ் சர்மா, தற்போது 57,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
பத்ருதீன் அஜ்மல் 52,000 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், காங்கிரசின் சிபாமோனி போரா 16,000 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.