பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் நாட்டவரை சுட்டுக்கொன்ற BSF வீரர்கள்

இந்திய எல்லையை நோக்கி வருவதை பிஎஸ்எப் வீரர்கள் கவனித்தனர்.
பிஎஸ்எப் வீரர்கள்
Published on: 
Summary

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய அவர்கள் மேற்கொண்ட முயற்சி, பிஎஸ்எப் வீரர்களால் முறியடிக்கப்பட்டது

பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எப்) சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாபில் தர்ன் தாரன் மாவட்டத்தின் கல்ரா பகுதியில் உள்ள ராஜோக் எல்லைச் சாவடிக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் பக்கத்திலிருந்து மூன்று பேர் சந்தேகத்திற்கிடமாக இந்திய எல்லையை நோக்கி வருவதை பிஎஸ்எப் வீரர்கள் கவனித்தனர்.

உஷாரான படைகள் உடனடியாக அவர்களை முன்னே வர வேண்டாம் என்று எச்சரித்தன.

துப்பாக்கிச் சூடு

இருப்பினும், பலமுறை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து முன்னேறி வந்ததால், பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை.

அவர்களை தவிர்த்து மற்றொரு ஊடுருவல்காரர் பாகிஸ்தானை நோக்கித் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் பஞ்சாப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்எப் அதிகாரிகள் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com