நரம்பில் ஏறிய பாம்பு விஷம்.. தம்பியின் கன்னத்தில் 150 அறை கொடுத்து உயிர் காத்த அண்ணன்

நரம்பு மண்டலத்தைப் பாம்பு விஷம் பாதித்துள்ளதாக தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Published on

உத்தரப் பிரதேசத்தில் தம்பியின் உயிரை காப்பாற்றும் சகோதரனின் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தில் அருண் (21) என்பவர் அண்மையில் மதிய வேளையில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும்போது, அதற்குள் இருந்த பாம்பு அவரின் கையில் கடித்தது.

உடலில் ஏறிய விஷம்

விஷம் உடலில் பரவியதால் அவருக்குக் மயக்கமும் அசெளகரியமும் ஏற்படத் தொடங்கியது.

அவரின் மூத்த சகோதரன் ஆகாஷ், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவமனையில் அருணைப் பரிசோதித்த மருத்துவர்கள், நரம்பு மண்டலத்தைப் பாம்பு விஷம் பாதித்துள்ளதாகவும் மயக்கம் காரணமாக அவர் சுயநினைவை இழக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தனர்.

அருணைத் தூங்க விடாமலும், சுயநினைவு தப்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தினர்.

150 அறை

மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக அருண் கண்ணை மூடத் தொடங்கும்போதெல்லாம், ஆகாஷ் அவரது கன்னத்தில் அறைந்து எழுப்பிக் கொண்டே இருந்தார்.

இவ்வாறு ஒரு மணி நேரத்திற்குள் 150க்கும் மேற்பட்ட முறை தனது தம்பியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

விஷமுறிவு

அதே நேரத்தில், மருத்துவர்கள் அருணிற்கு 15 விஷமுறிவு ஊசிகளை செலுத்தினர்.

சகோதரனின் அசைக்க முடியாத முயற்சியும் மருத்துவர்களின் சிகிச்சையும் இணைந்து அருணை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்துள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com