ராம்லீலா வருவதை தடுப்பது யார்? பொய் பரப்புவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

யார் தடுத்து நிறுத்தப்பட்டார்? யார் யாரை எங்கே தடுத்து நிறுத்தினார்கள்? ஆதாரத்தை காட்டுங்கள்.
ராகுல் காந்தி- சம்பித் பத்ரா
ராகுல் காந்தி- சம்பித் பத்ரா
Published on: 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக, அவரை பதவி நீக்கக்கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணி வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இதில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா கூட்டணி நடத்த இருக்கும் பேரணிக்கு நாடு முழுவரும் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வர இருக்கிறார்கள். அவர்களை அமித் ஷா தடுத்து நிறுத்துகிறார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில் "எங்கள் கட்சியினரும் சாதாரண மக்களும் தடுக்கப்படுகிறார்கள். ராம்லீலா மைதானத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குப் புரியும். லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதால், மக்களிடையே பெரும் கோபமும் மனவேதனையும் நிலவுகிறது.

இங்கே நடைபெறவுள்ள இந்தியா (INDIA) கூட்டணியின் நவம்பர் 1-ம் தேதி பேரணியில் கலந்து கொள்ள டெல்லிக்கு மக்கள் வருவதை தடுப்பதற்கு, உள்துறை அமைச்சர் தன்னால் இயன்றவரை முயற்சி செய்து கொண்டிருக்கிறார்" என்றார்.

பாஜக பதிலடி

இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:-

யார் தடுத்து நிறுத்தப்பட்டார்? யார் யாரை எங்கே தடுத்து நிறுத்தினார்கள்? ஆதாரத்தை காட்டுங்கள். பொய்களை பரப்புவதையும் நாட்டை தவறாக வழிநடத்துவதையும் நிறுத்துங்கள். வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான பொது கண்டன நடவடிக்கையை (public impeachment), முறையான ஏற்பாடுகளை செய்ய தவறியதால், இந்தியா (INDIA) கூட்டணி அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. அவர்களுக்கு அமைப்பு ரீதியான திறனும் போதவில்லை. ஒருவேளை இதனால்தான், அவர்கள் மாதிரி நாடாளுமன்ற நிகழ்வை (public impeachment) தள்ளிவைக்க வேண்டியிருந்தது.

இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

X