பழங்குடியின போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் - ஆளுநர் வாழ்த்து

ஜார்க்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மக்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Rajendra Vishwanath Arlekar
Published on: 

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டா பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

ஜார்க்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மக்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்கை வளங்கள், துடிப்பான பழங்குடியின பாரம்பரியம், பன்முக கலாச்சார மரபுகள் மற்றும் அளப்பரிய ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலம், நமது நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்த மாநிலம் அமைதி, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி, அனைத்துத் துறைகளிலும் புதிய மைல்கற்களை எட்டட்டும்.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலம் அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

என்று தெரிவித்துள்ளார்

X