கேரளத்தில் பறவைக்காய்ச்சல் - கோழிகளை அழிக்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரம்

விரைவு மீட்பு குழுவினர் ஆலப்புழாவில் உள்ள பண்ணைகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.
கேரளத்தில் பறவைக்காய்ச்சல் - கோழிகளை அழிக்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரம்
Published on: 
Summary

கோழிகள், காடைகள், வாத்துகள் அதிக அளவில் இறந்ததன் மூலம் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

கேரளம் மாநிலத்தில் அடிக்கடி பறவை காய்ச்சல் தாக்கம் நிகழ்ந்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக மீண்டும் பறவை காய்ச்சல் தொற்று பரவி வருவதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பாக ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம் பலப்புழா வடக்கு, அம்பலப் புழா தெற்கு சென்னிதலா பகுதிகளில் உள்ள கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் இருந்து பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்பட்டது. அங்குள்ள கோழிகள், காடைகள், வாத்துகள் அதிக அளவில் இறந்ததன் மூலம் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பண்ணைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பறவைகளுக்கு எச்5 என்1 வகை பறவை காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தொற்று பரவலை தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றி உள்ள சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைகளில் இருந்த கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் வந்ததை தொடர்ந்து விரைவு மீட்பு குழுவினர் ஆலப்புழாவில் உள்ள பண்ணைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள கோழிகள், வாத்துகள் போன்றவற்றை ஊசி போட்டு அழித்தனர்.

X