அடுத்த தேர்தலிலும் அவர்கள் உட்கார வேண்டிய இடம் இதுதான்: எதிர்க்கட்சிகளை சாடிய அமித்ஷா

பிரதமர் மோடி 2029-லும் மீண்டும் வெற்றி பெறுவார் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.அப்போதும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் என தெரிவித்தார்.
Amit Shah
Published on

சண்டிகர்:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சண்டிகரில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

2029-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். 2029-ல் பிரதமர் ஆக மோடி மீண்டும் பதவி ஏற்பார்.

கடந்த 3 தேர்தலிலும் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.

எதிர்க்கட்சியினர் நிலையற்ற தன்மையை விரும்புகின்றனர். இதனால்தான் பா.ஜ.க. அரசு நீடிக்காது எனக் கூறிவருகின்றனர்.

இந்த பதவிக்காலத்தை முழுமையாக பா.ஜ.க. நிறைவு செய்வதுடன், அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என அவர்கள் பாடம் படிக்கவேண்டும் என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com