போட்டோ எடுத்தபின் தட்டிலிருந்த முட்டையை தூக்கிய அங்கன்வாடி ஊழியர்கள் - வீடியோ

கர்நாடகாவில் அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
KARNATAKA Anganwadi
Published on

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர்.

பின்பு மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள். அதன்பின் தட்டில் இருந்த முட்டைகளை மாணவர்கள் சாப்பிடும் முன்பே அங்கிருந்த ஊழியர் எடுத்து விடுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com