காங்கிரஸ் பொருளாளராக அஜய் மாக்கன் நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா். பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.
காங்கிரஸ் பொருளாளராக அஜய் மாக்கன் நியமனம்
Published on

புதுடெல்லி:

காங்கிரசின் புதிய பொருளாளராக கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சி பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், 'அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா். முன்பு இப்பதவி வகித்த பவன் குமாா் பன்சால் ஆற்றிய பங்களிப்புக்காக, கட்சி அவரைப் பாராட்டுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி பொருளாளா் பவன் குமாா் பன்சாலுக்கு மாற்றாக, அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com