வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து தர்ணா போராட்டம்: நடிகை ரோஜா குண்டுக்கட்டாக கைது

ரோஜா டிகிரி கல்லூரி முன் வேட்பாளர் மற்றும் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
Roja
Published on: 

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் உள்ள விஜயபுரம் மண்டலம் இல்லத்தூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. டி.சி. வேட்பாளர் உதயகிரி தேவி 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை வைத்தது.

பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெளியே தள்ளிவிட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ஜெயபிரதா 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா டிகிரி கல்லூரி முன் வேட்பாளர் மற்றும் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,"வாக்கு எண்ணும் மையத்துக்குள் ஏஜெண்டுகளை அனுமதிக்க வில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்' என்றார்.

இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ரோஜாவை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்ப ஏற்பட்டது.

X