கேரள மாநில பாரதிய ஜனதா துணைத்தலைவராக நடிகர் தேவன் நியமனம்

நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநில பாரதிய ஜனதா துணைத்தலைவராக நடிகர் தேவன் நியமனம்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்தது மிகவும் பேசப்பட்டது.

நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலை வராக நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com