மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாள்.. மூளைச் சாவு அடைந்தும் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்வளித்த நபர்

இதற்காக 2 சிறப்பு 'பச்சை வழித்தடங்கள்' அமைக்கப்பட்டன.
மூளைச் சாவு அடைந்தும் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்வளித்த நபர்
Published on: 
Summary

சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 5 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 5 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்து முகம் தெரியாத ஐவரின் உயிரை காப்பாற்றிய அவரின் பெயர் நரேந்திர ரஜக். 40 வயதான இவர் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் இல்ல கங்காநகர் பகுதியில் நவ் நிவ்ஸ் காலனியில் வசித்து வந்தார்.

விபத்து

எச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நரேந்திர ரஜக், கடந்த அக்டோபர் 31 தனது உறவினரின் இறப்பு சடங்களில் கலந்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதியதில் பலத்த காயமடைந்தார்.

மோசமாக நிலையில் அவர் மெட்ரோ பிரைம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போக, அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தானம்

அன்புக்குரியவர் உயிரிழந்த சோகத்திற்கு மத்தியிலும் அவரின் மனைவி பூஜா ரஜக் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் நரேந்திர ரஜக் உடைய உடல் பாகங்களை தானம் செய்ய சம்மதித்தனர்.

நரேந்திராவுடைய 2 சிறுநீரகங்கள் (கிட்டி), கல்லீரல், இதயம், இரு கண்கள் மற்றும் தோல் தானமாக வழங்கப்பட்டது.

தானமாக வழங்கப்பட்டவற்றில் ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனையில் மற்றொருவருக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல், இதயம் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் இரு கண்கள், தோல், ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பச்சை வழித்தடம்

இதற்காக 2 சிறப்பு 'பச்சை வழித்தடங்கள்' அமைக்கப்பட்டன. ஒன்று கல்லீரலை குஜராத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பிரைம் மருத்துவமனையில் இருந்து ஜபல்பூர் விமான நிலையத்திற்கும் மற்றொருன்று பிரைம் மருத்துவமனையில் இருந்து ஜபல்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குமாகும்.

காலை 4 மணியளவில் மருத்துவக்குழு உறுப்புகளை எடுத்துச் செல்ல, அவர்கள் சென்ற இரு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு போலீசார் பந்தோபஸ்து கொடுத்து விரைந்து செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர்.

ஜபல்பூர் விமான நிலையம் இரவில் பூட்டியிருக்கும். எனவே நிர்வாக தரப்பு சிறப்பு ஏற்பாடுகளை செய்து செய்து கல்லீரல், இதயத்தை மருத்துவக்குழுவிடன் விமானத்தில் அனுப்பி வைத்தது.

அது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள CIMS மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் இதயமானது வேறொருவருக்கு பொருத்துவதற்கு ஏற்றதல்ல என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே கல்லீரல் மட்டும் வேறொருவருக்கு பொருத்தப்பட உள்ளது. அதே நேரம் ஜபல்பூர் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கண்கள் மற்றும் தோல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

தீக்காயம், ஆசிட் தாக்குதல் காயம் அடைந்தவர்களுக்கு இவ்வாறு தானமாக வழங்கப்பட்ட தோல் மூலம் டிஸ்யூ டிரான்ஸ்பிளான்ட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

X